கொள்ளையனிடம் நகை பறிக்கவிடாமல் போராடிய பெண்
கொள்ளையன் நகை பறிக்க முயன்றபோது யஸ்கூட்டரில் இருந்து விழுந்த நர்ஸ் நகை பறிக்கவிடாமல் போராடிய நிலையில் கொள்ளையன் தப்பினான்.
அரக்கோணம்
கொள்ளையன் நகை பறிக்க முயன்றபோது யஸ்கூட்டரில் இருந்து விழுந்த நர்ஸ் நகை பறிக்கவிடாமல் போராடிய நிலையில் கொள்ளையன் தப்பினான். காலில் காயத்துடன் நர்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நர்ஸ்
அரக்கோணம் சாஸ்திரி நகரை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி (வயது 41). இவர் அரக்கோணத்தை அடுத்த வெங்குபட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணியாற்றி வருகிறார். தமிழ்செல்வி நேற்று மாலை பணி முடிந்ததும் ஸ்கூட்டரில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
வேடல் காந்தி நகர் பகுதியில் அரக்கோணம் - சோளிங்கர் ரோட்டில் வந்து கொண்டிருந்த போது பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையன், தமிழ்ச்செல்வி கழுத்தில் அணிந்திருந்த 1½ பவுன் செயினை பறிக்க முற்றபட்ட போது தமிழ் செல்வி நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
செயினை இறுக பிடித்துக்கொண்டு 'திருடன்' 'திருடன்' என கத்தி கூச்சலிட்டார். அலறல் சத்தம் கேட்டு அவ்வழியாக சென்றவர்கள் வந்த போது கொள்ளையன், ோட்டார்சைக்கிளில் தப்பிவிட்டான்.
நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தமிழ்செல்விக்கு காலில் காயம் ஏற்படவே அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
வலைவீச்சு
இதனிடையே தமிழ்ச்செல்வி அளித்த புகாரின் பேரில் அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து செயின் பறிப்பில் ஈடுபட முயன்று தப்பிய கொள்ளையனை வலைவீசி தேடி வருகின்றனர்.