மது விற்ற பெண் கைது


மது விற்ற பெண் கைது
x

மது விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.

கரூர்

புன்னம்சத்திரம் அருகே பெரியரெங்கம்பாளையம் பகுதியில் சட்டவிேராதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, பெரியரெங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த ஷாலினி (வயது 26) என்பவர் அவரது வீட்டில் வைத்து மது விற்று கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஷாலினியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 5 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story