பெண்ணை தாக்கியவர் கைது


பெண்ணை தாக்கியவர் கைது
x

பெண்ணை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி பொழிக்கரை பகுதியை சேர்ந்த பத்மாவதி (வயது 37) என்பவரும், அதே பகுதியை சேர்ந்த லட்சுமி (55) என்பவரும் உறவினர்கள். இவர்களுக்குள் இடப்பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் லட்சுமி, அவரது மகன் முத்துப்பாண்டி (37) மற்றும் அவரது உறவினர் சுரேஷ் (35) ஆகியோர் பத்மாவதி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் தடுக்க வந்த பத்மாவதியின் குழந்தைகளையும் தாக்கி மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர். இதுகுறித்து பத்மாவதி சேரன்மாதேவி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் திருவளன் விசாரணை நடத்தி முத்துப்பாண்டியை நேற்று கைது செய்தார்.

1 More update

Next Story