போலீசுக்கு தெரியாமல் பெண் உடல் எரிப்பு
போலீசுக்கு ெதரியாமல் உடலை எரித்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே உள்ள கணபதி சுந்தர நாச்சியாபுரம் பகுதியை சேர்ந்தவா் சவுந்தரபாண்டியன். கூலித்தொழிலாளியான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வீரச்செல்வி (22) என்பவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு வீரச்செல்வி திடீரென இறந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் உறவினர்கள் அவரது உடலை மயானத்திற்கு எடுத்து சென்று போலீசாருக்கு தெரியாமல் எரித்துவிட்டனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ராமராஜ் அளித்த புகாரின் பேரில் சேத்தூர் புறநகர் போலீசார் வீரச்செல்வி எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story