பால்குடம், அக்னிசட்டி எடுத்து பெண்கள் நேர்த்திக்கடன்
பால்குடம், அக்னிசட்டி எடுத்து பெண்கள் நேர்த்திக்கடன்
ராமநாதபுரம்
சாயல்குடி,
கடலாடி அருகே வனப்பேச்சியம்மன் கோவில் ஸ்ரீகொண்டன அய்யனார் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு 13-ம் ஆண்டு வருடாபிஷேக விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சாயல்குடி ஜமீன்தார் சிவஞான பாண்டியன் தலைமை தாங்கினார். கடலாடி தாசில்தார் கடலாடி, சாயல்குடி இன்ஸ்பெக்டர்கள் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. கடலாடி மங்கள விநாயகர் கோவிலில் இருந்து வன பேச்சி அம்மன் கோவிலுக்கு பெண்கள் பால்குடம், அக்னி சட்டி ஊர்வலமாக எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். அன்னதானம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கிராமமக்கள் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்
Related Tags :
Next Story