எட்டெழுத்து பெருமாள் கோவிலில் பானைகளுக்கு வர்ணம் பூசும் பணி


எட்டெழுத்து பெருமாள் கோவிலில் பானைகளுக்கு வர்ணம் பூசும் பணி
x

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி எட்டெழுத்து பெருமாள் கோவிலில் பானைகளுக்கு வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது.

திருநெல்வேலி

கிருஷ்ண ஜெயந்தி விழா அடுத்த மாதம் 6-ந்தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலையிலும் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்று காலையில் கோபாலகிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது. மாலையில் கோபாலகிருஷ்ணருக்கு மண்பானையில் வெண்ணெய், நெய், முறுக்கு, அதிரசம், லட்டு, அல்வா, சீடை உள்ளிட்ட 104 வகையான திண்பண்டங்கள் படைக்கப்படுகின்றன.

கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி பல ஆயிரக்கணக்கான மண்பானை, கலயங்களில் கிருஷ்ணருக்கு பிடித்த பலகாரங்கள் வைத்து பூஜை செய்யப்பட உள்ளது. இதற்காக அந்த பானைகள், கலயங்களில் வர்ணம் பூசப்பட்டு கிருஷ்ணர், சிவன் மற்றும் சாமி படங்கள் வரையும் பணி மும்முரமாக வருகிறது. மேலும் கலயம் பிரசாதம் பெறுவதற்கு பக்தர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.


Next Story