நெல்லை சந்திப்பில் பயணிகள் நிழற்கூடம் அமைக்கும் பணி மும்முரம்


நெல்லை சந்திப்பில் பயணிகள் நிழற்கூடம் அமைக்கும் பணி மும்முரம்
x

தற்காலிகமாக டவுன் பஸ்கள் இயக்கப்படுவதையொட்டி நெல்லை சந்திப்பில் பயணிகள் நிழற்கூடம் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

திருநெல்வேலி

தற்காலிகமாக டவுன் பஸ்கள் இயக்கப்படுவதையொட்டி நெல்லை சந்திப்பில் பயணிகள் நிழற்கூடம் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

டவுன் பஸ்கள் இயக்கம்

நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் ரூ.79 கோடியில் புதுப்பித்து கட்டப்பட்டு வருகிறது. ஒரு பகுதி கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில், வழக்குகள், பிரச்சினைகளை சந்தித்து கடந்த 4 ஆண்டுகளாக இதர பணிகள் கிடப்பில் போடப்பட்டது.

இதில் கோர்ட்டு அனுமதியை பெற்று மீதமுள்ள பணிகளை மேற்கொண்டு விரைவில் திறக்க வேகமாக பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருவதால், பஸ் நிலையத்தின் ஒரு பகுதியை தற்காலிகமாக போக்குவரத்துக்கு திறக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர்.

இதையடுத்து சந்திப்பு பஸ் நிலையத்தை சுற்றிலும் தற்காலிகமாக டவுன் பஸ்களை இயக்குவதற்கு நெல்லை மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது.

பயணிகள் நிழற்கூடம்

இதற்காக பஸ் நிலையத்தின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தகர தடுப்புகள் அகற்றப்பட்டு, 2 பஸ்கள் வந்து செல்லும் வகையில் இடம் விட்டு உள்ளே தள்ளி அடைக்கப்பட்டது.

அங்கு பஸ்கள் எந்த வழியாக வந்து, வெளியே செல்வது, பயணிகளுக்கான வசதிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் மற்றும் போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இதை தொடர்ந்து பஸ் நிலையத்தின் கிழக்கு பகுதியில் ராஜா பில்டிங் அருகில் 4 பயணிகள் நிழற்கூடை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இரும்பு தூண்கள் நடப்பட்டு, மேற்கூரை அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு பயணிகள் நிழற்கூட பகுதியில் இருந்தும் ஒவ்வொரு பகுதிக்கான வழித்தட பஸ்கள் நின்று பயணிகளை அழைத்துச்செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.


Next Story