திருச்சி மாநகரின் அழகை பாழாக்கும் சுவரொட்டிகளை அகற்றும் பணி தீவிரம்


திருச்சி மாநகரின் அழகை பாழாக்கும் சுவரொட்டிகளை அகற்றும் பணி தீவிரம்
x

திருச்சி மாநகரின் அழகை பாழாக்கும் சுவரொட்டிகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருச்சி

திருச்சி மாநகரின் அழகை பாழாக்கும் சுவரொட்டிகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சுவரொட்டிகள்

திருச்சி மாநகரின் அழகை பாழாக்குவதில் சுவரொட்டிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பாலங்கள், அரசு அலுவலகங்கள், சுவர்கள், கட்டிடங்கள், குப்பை தொட்டிகள், பஸ்நிலையங்கள், சாலையின் தடுப்பு சுவர்கள் என்று திரும்பிய திசை எல்லாம் சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. பல இடங்களில் முகம் சுழிக்கும் வகையிலான சுவரொட்டிகளும் இடம்பெறுகின்றன. இவற்றால் மாநகர அழகு பாழாகிறது.

இதற்கு தீர்வு காணும் வகையில் தமிழகத்திலேயே முதன் முறையாக திருச்சி மாநகராட்சி புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. அது தான் "பொது சுவரொட்டி பலகை" என்ற புதிய திட்டம் ஆகும். அதன்படி மாநகராட்சியில் மொத்தம் 25 இடங்களில் பொது சுவரொட்டி பலகை வைக்கப்பட்டு உள்ளன.

இந்த பலகையில் மட்டும் தான் சுவரொட்டிகளை ஒட்ட வேண்டும். மற்ற இடங்களில் ஒட்டக்கூடாது என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியது. ஆனாலும் சுவரொட்டி ஒட்டுபவர்கள், வில்லியம்ஸ் சாலை, பாரதியார் சாலை, கலையரங்கம் சாலை, பகுதிகளில் பொது இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டி நகரின் அழகை பாழாக்கி வருகிறார்கள்.

மாநகராட்சி எச்சரிக்கை

இந்தநிலையில் நேற்று பல பகுதிகளில் பொதுஇடங்களில் ஒட்டப்பட்ட சுவரெட்டிகளை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றினர். மேலும் பொது சுவரொட்டி பலகை தவிர்த்து வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரித்துள்ளது.


Next Story