தள்ளி விட்டதில் கீழே விழுந்த தொழிலாளி சாவு


தள்ளி விட்டதில் கீழே விழுந்த தொழிலாளி சாவு
x

தள்ளி விட்டதில் கீழே விழுந்த தொழிலாளி சாவு

தஞ்சாவூர்

ஒரத்தநாடு

திருவோணம் அருகே தாயிடம் ஏற்பட்ட தகராறின்போது தள்ளிவிட்டதில் கீழே விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார், மகனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாயாரிடம் தகராறு

தஞ்சை மாவட்டம் திருவோணத்தை அடுத்துள்ள எழுத்தாணிவயல் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(வயது 55). தொழிலாளியான இவருக்கு பாக்கியம்(48) என்ற மனைவியும், வீரக்குமார்(30) என்ற மகனும் உள்ளனர்.

கோவிந்தராஜ் தினமும் குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் இரவும் கோவிந்தராஜ் குடிபோதையில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார்.

தள்ளி விட்டதில் இறந்தார்

இதனை வீரக்குமார் தட்டிக்கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வீரக்குமார், கோவிந்தராஜை தள்ளி விட்டார்.

இதில் கீழே கிடந்த துணி துவைக்கும் கல்லில் விழுந்த அவர் மயக்கம் அடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மகனிடம் போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வாட்டாத்திக்கோட்டை போலீசார், கோவிந்தராஜ் உடலை கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வாட்டாத்திக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து வீராக்குமாரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையின் முடிவில்தான் இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்படுமா? என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story