கட்டிலில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி


கட்டிலில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி
x

கட்டிலில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலியானார்.

திருப்பத்தூர்

ஆம்பூரை அடுத்த பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 46). ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மதியம் வீட்டில் உள்ள அறையில் கட்டிலில் படுத்து தூங்கினார். அப்போது கட்டிலில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதில் தலையில் காயம் ஏற்பட்டது. மாலையில் வேலைக்கு சென்ற இவரது மனைவி ராணி வீடு திரும்பியபோது சீனிவாசன் தரையில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், சீனிவாசனை ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story