கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி சாவு


கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 26 April 2023 12:15 AM IST (Updated: 26 April 2023 3:20 PM IST)
t-max-icont-min-icon

கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

விழுப்புரம்


திண்டிவனம்,

செங்கல்பட்டு மாவட்டம் கானாத்தூர் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி மகன் துரை (வயது 40) தொழிலாளி. இவர் திண்டிவனம் அடுத்த கொடியம் கிராமத்தில் உள்ள காசிநாதன் என்பவரது விவசாய கிணற்றில் சுற்றுச்சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, திடீரென அவர் கிணற்றுக்குள் தவறி விழுந்தார். உடன் அங்கிருந்தவர்கள் திண்டிவனம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் சுரேஷ்சேவியர் தலைமையில் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில், அவரை பிணமாக மீட்டு, வெள்ளிமேடு பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேதத்தை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story