தொழிலாளி மயங்கி விழுந்து சாவு


தொழிலாளி மயங்கி விழுந்து சாவு
x
தினத்தந்தி 10 Aug 2023 12:15 AM IST (Updated: 10 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளம் அருகே தொழிலாளி மயங்கி விழுந்து இறந்தார்.

தென்காசி

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே தென்காசி சாலையில் தனியாருக்கு சொந்தமான தவிட்டு எண்ணெய் தயாரிக்கும் ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் சுமார் 85 வடமாநிலத்தவர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆலையின் வளாகத்தின் உள்ளேயே அவர்கள் தங்குவதற்காக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று வேலை முடிந்த பின்னர் உத்தரபிரதேசம் மாநிலம் லக்ஷ்மிபூர் பகுதியை சேர்ந்த வடமாநில தொழிலாளியான மகேஷ் (வயது 48) என்பவர் அங்குள்ள குளியலறைக்கு குளிக்க சென்றுள்ளார். குளித்து கொண்டிருக்கும்போது திடீரென அவர் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

இதனை கண்ட சக தொழிலாளிகள் உடனே அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறினர். தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று உயிரிழந்த மகேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story