மயங்கி விழுந்த தொழிலாளி சாவு
செம்பனார்கோவில் அருகே மயங்கி விழுந்த தொழிலாளி சாவு
மயிலாடுதுறை
திருக்கடையூர்:
மயிலாடுதுறை மாவட்டம் கங்கனாம்புத்தூர் உக்கடை, தெற்கு தெருவை சேர்ந்த தர்மலிங்கம் (வயது 48). விவசாய கூலித் தொழிலாளியான இவர் மயிலாடுதுறை அருகே உள்ள மணக்குடி கோவிலில் நடைபெற்ற தனது உறவினர் இல்ல காதணி விழாவுக்கு சென்றார். அங்கிருந்து அவர் தனது உறவினர்களுடன் மோட்டார் சைக்கிளில் மேலபாதியில் உள்ள மது கடைக்கு சென்றதாக கூறபடுகிறது. அப்போது ஆற்றங்கரை வாழை கொள்ளை அருகே அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதைப் பார்த்த அவரது உறவினர்கள் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு தர்மலிங்கத்தை கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து செம்பனார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story