மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
கீரிப்பாறை அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
அழகியபாண்டியபுரம்:
கீரிப்பாறை அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
திருநெல்வேலி மாவட்டம் லெவஞ்சிபுரம் திருக்குறுங்குடி பகுதியை சேர்ந்தவர் நோவா (வயது42). பனை மரம் ஏறும் தொழிலாளி. இவருக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். சம்பவத்தன்று நோவா தனது ஊரில் நடைபெறும் கோவில் கொடைவிழாவிற்கு உலத்திபூ வெட்டுவதற்காக உறவினர் மகன் ரூபன் மற்றும் முத்துக்கிருஷ்ணன் ஆகியோருடன் டெம்போவில் தடிக்காரன்கோணத்தின் அருகில் உள்ள கூவக்காடு மலைப்பகுதிக்கு வந்தனர். பின்னர் நோவா உலத்திபூ வெட்டுவதற்காக மரத்தில் ஏறியுள்ளார். அப்போது திடீரென கால் தவறி மரத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் நோவா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கீரிப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.