மார்த்தாண்டம் அருகே தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு


மார்த்தாண்டம் அருகே தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
x

மார்த்தாண்டம் அருகே தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி இறந்தார்.

கன்னியாகுமரி

குழித்துறை:

மார்த்தாண்டம் அருகே உள்ள கடமக்கோடு மடத்துவிளையை சேர்ந்தவர் ராஜ ஜெயசிங் (வயது 36). இவருடைய மனைவி கிறிஸ்டல் பியூலா (36). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ராஜ ஜெயசிங் தென்னை மரத்தில் தேங்காய் பறிக்கும் தொழில் செய்து வந்தார். சம்பவத்தன்று அவர் அந்த பகுதியில் உள்ள வேறு ஒருவருக்கு சொந்தமான தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பதற்காக ஏறினார். அப்போது, திடீரென ராஜ ஜெயசிங் நிலைதடுமாறி தென்னை மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர், மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராஜ ஜெயசிங் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ராஜஜெயசிங்கின் மனைவி கிறிஸ்டல் பியூலா கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story