கால்வாயில் விழுந்த தொழிலாளி சாவு
கால்வாயில் விழுந்த தொழிலாளி ஒருவா் இறந்தாா்
ஈரோடு
சத்தியமங்கலம் அருகே உள்ள செண்பகப்புதூரை சேர்ந்தவர் சென்னியம்மாள். அவருடைய மகன் மனோகரன் (வயது 45). திருமணம் ஆகாதவர். தாயுடன் கூலிவேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நண்பர்களை பார்த்துவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
நேற்று காலை மனோகரன் செண்பகப்புதூர் பகுதியில் செல்லும் கழிவுநீர் கால்வாயில் விழுந்து கிடந்ததை அக்கம் பக்கத்தினர் பார்த்தனர். அதைத்தொடர்ந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு் சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு மனோகரன் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story