குளத்தில் தவறி விழுந்த தொழிலாளி பலி


குளத்தில் தவறி விழுந்த தொழிலாளி பலி
x
தினத்தந்தி 22 Oct 2022 12:15 AM IST (Updated: 22 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

குளத்தில் தவறி விழுந்த தொழிலாளி பலி

கோயம்புத்தூர்


கோவை கல்லாமேடு தெற்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் அரவிந்த்குமார் (வயது 30). கூலி தொழிலாளி. இவர் தனது பாட்டி வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் உக்கடம் பெரியகுளம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவருக்கு திடீரென வலிப்பு வந்து குளத்தில் தவறி விழுந்தார். இதனைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.


Next Story