செல்போன் கோபுரத்தில் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல்


செல்போன் கோபுரத்தில் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 21 Nov 2022 12:15 AM IST (Updated: 21 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்காதலுடன் ஓடிய மனைவியை மீட்டு தரக்கோரி செல்போன் டவரில் ஏறி நின்று தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்தார். அவர் கம்பியால் உடலை கீறிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோயம்புத்தூர்

கணபதி

கள்ளக்காதலுடன் ஓடிய மனைவியை மீட்டு தரக்கோரி செல்போன் டவரில் ஏறி நின்று தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்தார். அவர் கம்பியால் உடலை கீறிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

செல்போன் கோபுரம்

கோவை சத்தி ரோடு கணபதி காமாட்சி அம்மன் கோவில் எதிரே ராமசாமி முதலியார் வீதி சசிகுமார் என்பவரின் வீட்டின் முதல் தளத்தில் செல்போன் கோபுரம் உள்ளது. இந்த கோபுரத் தில் நேற்று மதியம் 12.30 மணி அளவில் லுங்கி மட்டும் அணிந்த 50 வயது மதிக்கத்தக்க நபர் ஏற தொடங்கினார்.

அவர் மளமளவென ஏறி செல்போன் கோபுரத்தின் உச்சிக்கு சென்றார். பின்னர் அவர், அங்கிருந்தபடி கூச்சலிட்டார். அதை கேட்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். செல்போன் கோபுர உச்சியில் ஒருவர் நின்றதால் அங்குகூட்டம் கூடியது.

தற்கொலை மிரட்டல்

இந்த நிலையில் அந்த நபர், தனது மனைவி கள்ளக்காதலுடன் சென்று விட்டார். அவரை மீட்டு தர வேண்டும். இல்லா விட்டால் கீேழ குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுத்தார்.

உடனே அங்கிருந்தவர்கள் சரவணம்பட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதில் தீயணைப்பு வீரர் ஒருவர் செல்போன் கோபுரத்தில் ஏறி, அந்த நபரை மீட்க முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர் யாராவது மேலே ஏறி வந்தால் கீழே குதித்து விடுவேன் என்று மிரட்டினார்.

கள்ளக்காதலனுடன் மனைவி ஓட்டம்

ஆனால் அந்த தீயணைப்பு வீரர், அந்த நபரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அந்த நபர், தான் திண்டுக்கல் மாவட்டம் பாரதிபுரம் நாகல் நகரைச் சேர்ந்த சின்னு என்பவரின் மகன் வீரன் (வயது54) என்றும், கோவை உக்கடம் கரும்புக்கடை பகுதி யில் வசித்து வருவதாகவும், தனது மனைவி, கள்ளக்காதலுடன் சென்று விட்டதாகவும், அவரை மீட்டு தர வேண்டும் என்று கூறினார்.

உடனே வீரனிடம் கீழே இறங்கி வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்று தீயணைப்பு நிலைய வீரர் கூறினார். ஆனால் அவரை கீழே இறங்க மறுத்து விட்டது. மேலும் அவர், செல் போன் கோபுரத்தில் இருந்த கம்பிைய எடுத்து தனது உடலில் கீறிக் கொண்டார்.

உணவு சாப்பிட்டார்

இதனால் ரத்த காயம் ஆனதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே தீயணைப்பு நிலைய வீரர் கீழே இறங்கி விட்டார். இதையடுத்து செல்போன் கோபுரத்தை பராமரிக்கும் நிறுவன ஊழியர்கள் அங்கு வந்தனர். அவர்கள் செல்போன் கோபுரத்தில் ஏறி, வீரனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மாலை 4.30 மணி ஆகி விட்டதால் வீரனுக்கு உணவும், தண்ணீரும் கொடுக்கப்பட்டது. அதை வாங்கிய அவர் செல்போன் கோபுரத்தில் அமர்ந்தபடி சாப்பிட்டு தண்ணீர் குடித்தார். இதைத்தொடர்ந்து செல்போன் கோபுர நிறுவன ஊழியர்கள், நைசாக பேச்சு கொடுத்து வீரனை கீழே இறங்குமாறு கேட்டுக் கொண்டனர். அதை ஏற்று அவர் மாலை 5.30 மணிக்கு கீழே இறங்கி வந்தார்.

5 மணி நேர போராட்டம்

இதையடுத்து வீரனிடம் சரவணம்பட்டி இன்ஸ்பெக்டர் சரவ ணன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். கம்பியால் கீறிய காயம் இருந்ததால் வீரன் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத் திரிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.

இதனால் செல்போன் கோபுரத்தில் ஏறி 5 மணி நேரமாக மிரட்டல் விடுத்த வீரனின் போராட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் அங்கிருந்த பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.


Next Story