அரிவாளால் வெட்டி தொழிலாளி கொலை
நாகூர் அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டி கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நாகூர்:
நாகூர் அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டி கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு
நாகூரை அடுத்த ஒக்கூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் அஞ்சான் மகன் மோகன் (வயது 42). இவர் ஒக்கூர் மெயின் ரோட்டில் உள்ள ஒரு டீ கடையில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை மோகன் கடையில் தேங்காய் உடைத்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ஓக்கூர் தெற்கு தெருவை சேர்ந்த சந்திரசேகர் மகன் சதீஷ் (22) என்பவர் மோகன் கையில் வைத்து இருந்த அரிவாளை பிடிங்கி மோகன் தலையில் வெட்டினார். உடனே அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.இதுகுறித்து நாகூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வாலிபர் கைது
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த நாகூர் போலீசார், வெட்டுபட்டு கிடந்த மோகனை மீட்டு நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மோகன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த நாகூர் போலீசார் சதீசை கைது செய்தனர். மேலும், முன்விரோதம் காரணமாக மோகன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் ? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.