கிரகப்பிரவேசத்திற்கு வந்த தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி


கிரகப்பிரவேசத்திற்கு வந்த தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி
x

கிரகப்பிரவேசத்திற்கு வந்த தொழிலாளி மின்சாரம் தாக்கி பலியானார்.

ராணிப்பேட்டை

திருத்தணி அருகே உள்ள கசவராஜபேட்டை பெரிய கடம்பத்தூர் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் கோவர்தனன் (வயது 29). இவர் திருத்தணியில் ஒரு கடையில் வேலை செய்து வந்தார். கடையின் உரிமையாளர் பார்த்திபன் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகரில் திரவுபதி அம்மன் கோவில் அருகே புதிதாக வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்தார். இதற்காக கோவர்தனன் சோளிங்கருக்கு வந்திருந்தார்.

நேற்று காலை சுமார் 8 மணி அளவில் அவர் வீட்டின் மாடியில் நின்று கொண்டிருந்த போது அங்குள்ள கம்பத்தில் கை வைத்துள்ளார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்தார். உடனடியாக அவரை சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் இறந்து விட்டது தெரிய வந்தது.

இதுகுறித்து கோவர்தனின் தம்பி சிவபாதம் (27) சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் இன்ஸ்பெக்டர் பாரதி, சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story