சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு ஜெயில்


சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு ஜெயில்
x

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்தது.

திருவண்ணாமலை

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்தது.

போக்சோ சட்டத்தில் கைது

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா பாச்சல் கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 25), கூலித்தொழிலாளி. இவரும், 17 வயது சிறுமியும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் 27-ந்தேதி சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். பின்னர் அவர், சிறுமியை திருமணம் செய்து கொள்ள மறுத்து உள்ளார்.

இதுகுறித்து சிறுமி, அவரது பெற்றோரிடம் தெரிவித்து உள்ளார். இந்த சம்பவம் குறித்து செங்கம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அய்யப்பனை கைது செய்தனர்.

20 ஆண்டு ஜெயில்

இதுதொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதில் அரசு தரப்பில் வக்கீல் மைதிலி ஆஜரானார்.

இந்த நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி தீர்ப்பு கூறினார். அதில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அய்யப்பனுக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்கவும் பரிந்துரை செய்தார். பின்னர் அய்யப்பனை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story