சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 22 ஆண்டுகள் ஜெயில்


சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 22 ஆண்டுகள் ஜெயில்
x

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 22 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து வேலூர் போக்சோ கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

ராணிப்பேட்டை

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 22 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து வேலூர் போக்சோ கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

பாலியல் பலாத்காரம்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே உள்ள அனந்தலை கிராமம் பச்சையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 34). தொழிலாளி.

இவர் 1.6.2019 அன்று விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

இது குறித்து சிறுமி தனது தாயாரிடம் கூறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது சம்பந்தமாக ராஜாவிடம் கேட்டுள்ளனர்.

அப்போது ராஜா, மாணவியின் தாயாருக்கு கொலை மிரட்டல் விடுத்து உள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் தாயார் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், ராஜா மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

22 ஆண்டு ஜெயில்

இதுதொடர்பான வழக்கு வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் சந்தியா ஆஜராகி வாதாடினார்.

நேற்று முன்தினம் இந்த வழக்கில் நீதிபதி கலைப்பொன்னி தீர்ப்பு வழங்கினார். அதில் ராஜாவுக்கு 22 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

பின்னர் அவரை போலீசார் வேலூர் ஜெயிலுக்கு அழைத்துச் சென்று அங்கு அடைத்தனர்.


Next Story