செண்டுமல்லி பூக்கள் விளைச்சல் அமோகம்


செண்டுமல்லி பூக்கள் விளைச்சல் அமோகம்
x
தினத்தந்தி 17 Oct 2023 7:45 PM GMT (Updated: 17 Oct 2023 7:45 PM GMT)

கூடலூர் பகுதியில் செண்டுமல்லி பூக்கள் அமோக விளைச்சல் அடைந்துள்ளது.

தேனி

தேனி மாவட்டம் கூடலூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் ஒட்டிய பகுதிகளில் தோட்ட விவசாயிகள் அதிக அளவில் செண்டுமல்லி பூக்கள் சாகுபடி செய்துள்ளனர். இங்கு விளையும் பூக்களை கம்பம் மற்றும் மதுரை பூ மார்க்கெட்டிற்கு கொண்டு போய் விற்பனை செய்கின்றனர். இந்தப் பகுதிகளில் கடந்த மாதம் பெய்த தொடர் மழையினால் தற்போது செண்டுமல்லி பூக்கள் அமோக விளைச்சல் அடைந்துள்ளது. கடந்த ஆகஸ்டு மாதத்தில் வி நாயகர் சதுர்த்தி, புரட்டாசி மாதம் சிறப்பு பூஜை வழிபாடுகளுக்கு பூக்களின் தேவை அதிகரித்து இருந்தது. இதனால் செண்டு மல்லி பூக்களின் விலையும் உயர்ந்தது. இந்த நிலையில் நேற்று ஒரு கிலோ ரூ.20 முதல் ரூ.35 வரை விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து விவசாயிகளிடம் கேட்டபோது, ஆயுதபூஜை, சரசுவதி பூஜை மற்றும் திருமணம் உள்ளிட்ட விேசஷ நாட்கள் வருவதால் செண்டுமல்லி பூக்களின் தேவை அதிகரிக்கும். இதன் காரணமாக செண்டுமல்லி பூக்களின் விலையும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்ப்புடன் பயிரிட்டு உள்ளோம் என்றனர்.


Next Story