மல்பெரி பழங்கள் விளைச்சல் அமோகம்
மல்பெரி பழங்கள் விளைச்சல் அமோகம்
நீலகிரி
கூடலூர்
கூடலூர், மசினகுடி பகுதியில் பட்டுப்பூச்சி வளர்ப்புக்கு பயன்படுத்தப்படும் மல்பெரி செடிகள் பரவலாக பயிரிடப்படுகிறது. இந்த நிலையில் மல்பெரி செடிகளில் பழங்கள் அமோக விளைச்சலுடன் காணப்படுகிறது. இதை விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர். மல்பெரி பழங்களில் நோய் எதிர்ப்பு திறன் அதிகம் உள்ளதால் பலர் விவசாயிகளிடம் விரும்பி வாங்கி செல்கின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, மல்பெரி செடிகள் பட்டுப்பூச்சி வளர்ப்புக்கு பயன்படுத்தப்படுகிறது என்பது அனைவரும் தெரிந்த விஷயம். ஆனால் இச்செடிகளில் உள்ள பழங்கள் மனிதர்களுக்கு மிகுந்த நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. தற்போது சீசன் நிலவுவதால் பலர் வாங்கி செல்கின்றனர் என்றனர்.
Related Tags :
Next Story