வானில் நடந்த அதிசய நிகழ்வை நவீன தொலைநோக்கி மூலம் ஊருக்கே காட்டி மகிழ்ந்த இளைஞர்


வானில் நடந்த அதிசய நிகழ்வை நவீன தொலைநோக்கி மூலம் ஊருக்கே காட்டி மகிழ்ந்த இளைஞர்
x
தினத்தந்தி 27 Sept 2022 4:59 PM IST (Updated: 27 Sept 2022 5:01 PM IST)
t-max-icont-min-icon

வந்தாவாசியை சேர்ந்த மோகன்ராஜ், பூமிக்கு அருகில் வரும் வியாழன் கிரகத்தை அதிநவீன தொலைநோக்கி மூலம் மக்களுக்கு காட்டினார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் வசிக்கும் ஒரு இளைஞர் பூமிக்கு அருகில் வரும் வியாழன் கிரகத்தை அதிநவீன டெலஸ்கோப் மூலம் மக்களுக்கு காட்டினார்.

இரும்பேடு கிராமத்தைச் சேர்ந்த மோகன்ராஜ், சிறுவயது முதலே வானிலை ஆராய்ச்சி செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்த நிலையில், மூன்று லட்சம் ரூபாய் செலவில் அதிநவீன டெலஸ்கோப் வாங்கியுள்ள அவர், 59 ஆண்டுகளுக்குப் பிறகு வியாழன் கிரகம் பூமிக்கு அருகில் வருவதை படம் பிடித்து மக்களுக்கு காண்பித்தார்.

இதனை நவீன தொலைநோக்கியின் மூலம் பள்ளி மாணவர்களும் பொதுமக்களும் ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர்.

1 More update

Next Story