விபத்தில் வாலிபர் பலி


விபத்தில் வாலிபர் பலி
x

கருங்கல் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.

கன்னியாகுமரி

கருங்கல்:

கருங்கல் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.

வாலிபர்

புதுக்கடை அருகே காடஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருடைய மகன் அஜின் (வயது 22). இவர் ஆந்திராவில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார்.

இந்தநிலையில் புதுக்கடையில் இருந்து கருங்கலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மாங்கரை காட்டுக்குழி பகுதியில் சென்றபோது அந்த வழியாக வந்த தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி திருவள்ளுவர் தெருவை சோ்ந்த கவுதம் (26) என்பவர் ஓட்டி வந்த கார் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் எதிர்பாராத விதமாக மோதியது.

பலி

இதில் அஜின் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த கருங்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தபோது விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story