லாரியை திருடி சென்ற வாலிபர் சிக்கினார்


லாரியை திருடி சென்ற வாலிபர் சிக்கினார்
x

ஆனைமலையில் இருந்து திருப்பூருக்கு லாரியை திருடி சென்ற வாலிபர் சிக்கினார்.

கோயம்புத்தூர்

ஆனைமலை

ஆனைமலையில் இருந்து திருப்பூருக்கு லாரியை திருடி சென்ற வாலிபர் சிக்கினார்.

லாரி டிரைவர்

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சியை சேர்ந்தவர் மதுசெனை(வயது 38). பழைய பேப்பர் கம்பெனி நடத்தி வருகிறார். இவரிடம், கோவை மாவட்டம் ஆனைமலை திவான்சாபுதூரை சேர்ந்த அங்கமுத்து என்பவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று அங்கமுத்து வேலையை முடித்துவிட்டு லாரியில் ஆனைமலையில் உள்ள தனது வீட்டுக்கு வந்தார். இரவு லாரியை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார்.

நள்ளிரவில் அவருடன் வேலை செய்யும் மற்றொரு லாரி டிரைவர் சுரேஷ், அங்கமுத்துவை செல்ேபானில் தொடர்பு கொண்டார். பின்னர் லாரியை எடுத்துக்கொண்டு எங்கே செல்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அங்கமுத்து, நான் வீட்டில்தான் இருக்கிறேன், எங்கும் செல்லவில்லை என்று கூறினார். ஆனால் ஜி.பி.எஸ். மூலம் ஆய்வு செய்தால், திருப்பூரில் சென்று கொண்டு இருப்பதாக காட்டுகிறது என்று சுரேஷ் கூறினார்.

கைது

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அங்கமுத்து வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தார். அங்கு லாரியை காணவில்லை. யாரோ திருடி சென்றிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து ஆனைமலை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், திருப்பூர், குமரலிங்கம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் அந்த லாரியை மடக்கினர். பின்னர் அதை திருடி சென்ற நபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர், ஆனைமலை திவான்சாபுதூரை சேர்ந்த பஞ்சலிங்கம்(34) என்பது தெரியவந்தது. தொடர்ந்து ஆனைமலை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரை கைது செய்த போலீசார், லாரியை மீட்டனர். திருடு போன ஒரே நாளில் லாரி மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story