தொழிலாளியை அரிவாளால் வெட்டி கொன்ற தம்பி


தொழிலாளியை அரிவாளால் வெட்டி கொன்ற தம்பி
x
தினத்தந்தி 11 March 2023 12:30 AM IST (Updated: 11 March 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

சின்னமனூர் அருகே சொத்து பிரச்சினையில் தொழிலாளியை அவருடைய தம்பி அரிவாளால் வெட்டி கொலை செய்தார்.

தேனி

சொத்து பிரச்சினை

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள எரசக்கநாயக்கனூரை சேர்ந்தவர் முருகன் (வயது 49). கூலித்தொழிலாளி. இவருடன், அவரது தாய் மீனாட்சி (70), தம்பி பால்பாண்டி (38) ஆகியோர் வசித்து வந்தனர். பால்பாண்டி வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். பால்பாண்டிக்கும், முருகனுக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு எரசக்கநாயக்கனூரில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நடந்து வந்து கொண்டிருந்த முருகனை வழிமறித்து பால்பாண்டி தகராறு செய்தார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வெட்டிக்கொலை

இதில் ஆத்திரம் அடைந்த பால்பாண்டி மறைத்து வைத்திருந்த அரிவாளை எடு்த்து முருகனை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்தி ேலயே துடி, துடித்து பரிதாபமாக இறந்தார். உடனே அங்கிருந்து பால்பாண்டி தப்பியோடி விட்டார்.

இதுகுறித்து சின்னமனூர் போலீசாருக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் கொடுத்தனர். அதன்போில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கைது

இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து எரசக்கநாயக்கனூர் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் பதுங்கி இருந்த பால்பாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சொத்து பிரச்சினையில் அண்ணனை, தம்பி அரிவாளால் வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 More update

Next Story