கொண்டை ஊசி வளைவு தடுப்பு சுவரில் மோதி வாலிபர் படுகாயம்


கொண்டை ஊசி வளைவு தடுப்பு சுவரில் மோதி வாலிபர் படுகாயம்
x

ஏலகிரி மலை கொண்டை ஊசி வளைவு தடுப்பு சுவரில் மோதி வாலிபர் படுகாயம் அடைந்தார்.

திருப்பத்தூர்

சென்னை அருகே உள்ள கேளம்பாக்கம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவரது மகன் தீபக் (வயது 21). பட்டதாரியான இவர் நேற்று ஏலகிரி மலையில் நடைபெற்ற தனது நண்பரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மோட்டார் சைக்கிளில் வந்திருந்தார். திருமண நிகழ்ச்சி முடிந்ததும் மோட்டார் சைக்கிளில் சென்னைக்கு புறப்பட்டார்.

ஏலகிரி மலை 13-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது நிலை தடுமாறி தடுப்பு சுவர் மீது மோதி கீழே விழுந்து கால் முறிவு ஏற்பட்டது. அவரை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து சென்னை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இது சம்பந்தமாக தீபக் கொடுத்த புகாரின் பேரில் ஏலகிரி மலை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மயில்வாகனம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story