இளம்பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்த வாலிபர் கைது


இளம்பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 10 April 2023 12:15 AM IST (Updated: 10 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆபாச புகைப்படத்தை காட்டி இளம்பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோயம்புத்தூர்

கோவை

ஆபாச புகைப்படத்தை காட்டி இளம்பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

இளம்பெண்

கோவை மாநகர பகுதியை சேர்ந்த 23 வயதான இளம்பெண் ஆடை வடிவமைப்பாளராக உள்ளார். இவருடைய வீட்டின் அருகே ஷாஜகான் (வயது 34) என்பவர் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். திருமணமான ஷாஜகான் தனது மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.

சம்பவத்தன்று 23 வயது இளம்பெண் தனது வீட்டின் அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது வெளியே வந்த ஷாஜகான் அந்த இளம்பெண்ணிடம் தனது கைகள் மூலம் ஆபாச சைகை காட்டி உல்லாசத்துக்கு அழைத்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் வீட்டுக்குள் சென்று விட்டார்.

உல்லாசத்துக்கு அழைத்தார்

சிறிது நேரம் கழித்து அந்த இளம்பெண் வெளியே வந்தபோது, அங்கு நின்று கொண்டு இருந்த ஷாஜகான் திடீரென்று அந்த இளம்பெண் பக்கத்தில் சென்றார். பின்னர் அவர் தனது செல்போனில் உள்ள ஆபாச புகைப்படத்தை அந்த இளம்பெண்ணிடம் காட்டினார்.

அத்துடன் அவர் வா, என் வீட்டில் யாரும் இல்லை, நான் தனியாகதான் இருக்கிறேன், நாம் இருவரும் சந்தோஷமாக, உல்லாசமாக இருக்கலாம் என்று அழைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த இளம்பெண் கோவை பெரியக்கடை வீதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

கைது செய்தனர்

இந்த புகாரின் பேரில் ஷாஜகான் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story