கோவிலில் திருடிய வாலிபர் கைது
மார்த்தாண்டம் அருகே கோவிலில் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி
குழித்துறை:
மார்த்தாண்டம் அருகே கோவிலில் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மார்த்தாண்டம் அருகே உள்ள பரியாக்கரையில் தேவி முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழா முடிந்ததையடுத்து ஒலிபெருக்கி உரிமையாளர் வயர்களை அங்கு வைத்திருந்தார். இந்தநிலையில் அந்த வயர்களை யாரோ மர்ம நபர் திருடி சென்றுவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த கோவில் நிர்வாகத்தினர் கோவிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் கொல்லஞ்சி பகுதியை சேர்ந்த வினுகுமார் (வயது 35) என்பவர் வயரை திருடியது பதிவாகியிருந்தது. இதுகுறித்து ஒலி பெருக்கி உரிமையாளர் திருவிதாங்கோடு பருத்திக்காட்டுவிளையை சேர்ந்த சுனில் (39) மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து வினுகுமாரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story