காரியாபட்டி அருகே கலையரங்க கட்டிடங்கள்


காரியாபட்டி அருகே கலையரங்க கட்டிடங்கள்
x

காரியாபட்டி அருகே கலையரங்க கட்டிடங்கள் திறக்கப்பட்டன.

விருதுநகர்

காரியாபட்டி,

காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் கீழ இடையங்குளம், குண்டுகுளம், வல்லப்பன்பட்டி ஆகிய கிராமங்களில் கலையரங்க கட்டிடங்களும், உவர்குளத்தில் ரேஷன் கடையும் கட்டப்பட்டது. இந்த கட்டிடங்களை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார். வல்லப்பன்பட்டி கிராமத்தில் கலையரங்கத்தை திறந்து வைத்து அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:- சட்டமன்ற தேர்தலில் இந்த கிராமத்திற்கு வாக்கு சேகரிக்க வந்த போது இந்த கிராம மக்கள் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் 2 கி.மீ. தூரம் நடந்து சென்று தான் வாங்க வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதனால் இங்கு ரேஷன் கடை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மேலும் கலையரங்க கட்டிடம் வேண்டும் என்றனர். அதன் அடிப்படையில் இந்த கிராமத்திற்கு ரேஷன் கடை மற்றும் கலையரங்க கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இந்தநிகழ்ச்சியில் ஒன்றியச்செயலாளர்கள் கண்ணன், செல்லம், பேரூராட்சித்தலைவர் செந்தில், மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், பொதுக்குழு உறுப்பினர் சிவசக்தி, மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் வாலை முத்துச்சாமி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கருப்பு ராஜா, அல்லாளப்பேரி ஊராட்சி மன்றத்தலைவர் பிரபா சிவக்குமார், தி.மு.க. நிர்வாகிகள் நல்ல மணி, சலுகை, வல்லப்பன்பட்டி தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story