பண்ணை வீட்டில் பூட்டைஉடைத்து உண்டியல் திருட்டு


பண்ணை வீட்டில் பூட்டைஉடைத்து உண்டியல் திருட்டு
x
தினத்தந்தி 26 Sept 2023 1:00 AM IST (Updated: 26 Sept 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

பண்ணை வீட்டின் பூட்டை உடைத்து உண்டியலை திருட்டு போனது.

தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த அ.பள்ளிப்பட்டியை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 49). விவசாயி. இவர், சென்னையில் புளூ மெட்டல்ஸ் டிரான்ஸ்போர்ட் வைத்து தொழில் நடத்தி வருகிறார். இவருக்கு அ.பள்ளிப்பட்டியில் அரூர் - சேலம் மெயின் ரோட்டில் தோட்டத்துடன் கூடிய பண்ணை வீடு உள்ளது. இவர், மாதம் ஒரு முறை சென்னையில் இருந்து பள்ளிப்பட்டிக்கு வந்து செல்வது வழக்கம். மற்ற நாட்களில் விவசாய தோட்டம் மற்றும் வீட்டை அவரது மாமனார் கோவிந்தன் பார்த்துக் கொள்வார். இந்த வீட்டில் சம்பவத்தன்று மாலை லைட் போட கோவிந்தன் வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த உண்டியலையும், 2 ஆயிரம் ரூபாயும், பீரோவில் இருந்த பொருட்கள் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து அண்ணாமலை கொடுத்த புகாரின் பேரில் அ.பள்ளிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கெய்க்வாட் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Next Story