ஓசூரில் சிற்பி வீட்டில் ரூ.20 லட்சம், நகை திருட்டு


ஓசூரில் சிற்பி வீட்டில் ரூ.20 லட்சம், நகை திருட்டு
x
தினத்தந்தி 3 Oct 2023 1:00 AM IST (Updated: 3 Oct 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் சிற்பி வீட்டில் ரூ.20 லட்சம், நகை திருட்டு போனது.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர் ஆவலப்பள்ளி சாலை சுபாஷ் நகரை சேர்ந்தவர் தில்லை கோவிந்தராஜ் (வயது 50). சிற்பி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் சுற்றுலா சென்றதாக கூறப்படுகிறது. இதனால் வீடு பூட்டப்பட்டிருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவு முன்பக்க கதவை பூட்டிவிட்டு மாடி வழியாக வீட்டுக்குள் குதித்துள்ளனர். பின்னர் உள்ளே சென்று பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.20 லட்சம், 12 பவுன் நகைகள் மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை திருடி சென்றதாக தெரிகிறது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் தில்லை கோவிந்தராஜூக்கு தகவல் தெரிவித்தனர். இதுதொடர்பாக அவர் ஓசூர் அட்கோ போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிற்பி வீட்டில் பணம், நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.


Next Story