விழுப்புரம் அருகே விவசாயி வீட்டில் திருட்டு


விழுப்புரம் அருகே  விவசாயி வீட்டில் திருட்டு
x

விழுப்புரம் அருகே விவசாயி வீட்டில் திருடு போனது.

விழுப்புரம்


விழுப்புரம் அருகே உள்ள நரையூர் பாதை சிவசண்முகா நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 48), விவசாயி. இவர் நேற்று முன்தினம் காலை சொந்த வேலையாக விழுப்புரம் சென்றிருந்தார். பின்னர் அவரது மகனும், மருமகளும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டனர். இந்நிலையில் ராஜேந்திரனின் மருமகளான சகாதேவன்பேட்டை தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் நந்தினி, பணி முடிந்து மாலை 5 மணியளவில் வீட்டிற்கு சென்றார்.

அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார். உடனே உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ஒரு கிராம் தங்க மோதிரம், ஒரு ஜோடி வெள்ளி கொலுசு மற்றும் பூஜை அறையில் இருந்த பித்தளையினால் ஆன 2 குத்துவிளக்குகள், வெள்ளியால் ஆன ஒரு காமாட்சியம்மன் விளக்கு ஆகியவை திருடு போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட யாரோ மர்ம நபர்கள், கதவை உடைத்து உள்ளே புகுந்து மேற்கண்ட பொருட்களை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. திருடுபோன பொருட்களின் மதிப்பு ரூ.50 ஆயிரமாகும். இதுகுறித்த புகாரின்பேரில் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story