திருச்செங்கோடு அருகே தறித்தொழிலாளி வீட்டில் ரூ.5 லட்சம் நகை, பணம் திருட்டு


திருச்செங்கோடு அருகே  தறித்தொழிலாளி வீட்டில் ரூ.5 லட்சம் நகை, பணம் திருட்டு
x

திருச்செங்கோடு அருகே தறித்தொழிலாளி வீட்டில் ரூ.5 லட்சம் நகை, பணம் திருட்டு

நாமக்கல்

எலச்சிபாளையம்:

திருச்செங்கோடு அருகே தறித்தொழிலாளி வீட்டில் ரூ.5 லட்சம் நகை, பணம் திருட்டு போனது.

தறித்தொழிலாளி

திருச்செங்கோடு தாலுகா வரகூராம்பட்டி ஊராட்சி அய்யகவுண்டம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 68). தறித்தொழிலாளி. இவருக்கு ஒரே வளாகத்தில் 3 வீடுகள் உள்ளன. இவரது மகன் பெங்களூருவில் வசித்து வரும் நிலையில் வளாகத்தில் உள்ள ஒரு வீட்டில் முத்துசாமியும், அவரது மனைவி பழனியம்மாளும் வசித்து வருகின்றனர்..

இந்த நிலையில் நேற்று காலை முத்துசாமி வழக்கம் போல் தறிப்பட்டறைக்கு செல்ல புறப்பட்டபோது மற்ற 2 வீடுகளின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 2¼ பவுன் நகை, ஒரு பிளாட்டினம் நகை, ரூ.1¾ லட்சம், ஒரு கிலோ வெள்ளி பூஜை பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.5 லட்சம் என கூறப்படுகிறது.

பரபரப்பு

இதுகுறித்து அவர் திருச்செங்கோடு ஊரக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர்.

வீட்டுக்குள திருட வந்த நபர்கள் ஒரு அரிவாள் மற்றும் கல் ஒன்றை விட்டு ஒன்றுள்ளனர். முத்துசாமிக்கு 3 வீடுகள் உள்ள நிலையில், தனிமையில் உள்ள வீடு என்பதை அறிந்து பக்கத்து வீட்டில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டியிருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி மர்மநபர்கைள தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story