மணல் திருட்டு; வேன் பறிமுதல்
மணல் திருட்டு தொடர்பாக வேன் பறிமுதல் செய்யப்பட்டது.
சிவகங்கை
திருப்புவனம்,
பூவந்தி போலீஸ் சரகத்தைச் சேர்ந்தது கருங்குளம் கிராமம். இங்குள்ள மயானம் அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட சரக்கு வேன் மணலுடன் பழுதாகி நின்றுள்ளது. இதுகுறித்து பாப்பாகுடி குரூப் கிராம நிர்வாக அலுவலர் கருப்புச்சாமி, கிராம உதவியாளருக்கு தகவல் கிடைத்தது. அவர் அங்கு சென்று மணல் ஏற்றியபடி பழுதாகி நின்ற சரக்குவேனை கைப்பற்றி பூவந்தி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து ஒப்படைத்து, மணல் திருட்டில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு, பூவந்தி போலீஸ் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் கருப்புச்சாமி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரிதாபாலு வழக்குப்பதிவு செய்து பறிமுதல் செய்யப்பட்ட சரக்கு வேனின் உரிமையாளர் யார் என விசாரணை செய்து வருகிறார்.
Related Tags :
Next Story