பள்ளிபாளையம் அருகே கோவில் உண்டியலில் நூதன முறையில் திருட்டு சமூக வலைத்தளத்தில் வீடியோ பரவியதால் பரபரப்பு
பள்ளிபாளையம் அருகே கோவில் உண்டியலில் நூதன முறையில் திருட்டு சமூக வலைத்தளத்தில் வீடியோ பரவியதால் பரபரப்பு
நாமக்கல்
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் அருகே உள்ள ஆவத்திபாளையத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் முன்பு உண்டியல் வைக்கப்பட்டு பக்தர்கள் காணிக்கை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரியம்மன் கோவில் உண்டியலில் இருந்து ஒருவர் குச்சியில் நூலை சுற்றி பசை தடவி காணிக்கை பணத்தை திருடிய வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவியது.
இதனை பார்த்த கோவில் நிர்வாகிகள், இதுதொடர்பாக விசாரித்தபோது, உண்டியலில் குச்சியை விட்டு திருடியது கோவில் நிர்வாகிகளில் ஒருவர் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அனைத்து கோவில் நிர்வாகிகளும் கலந்து பேசி போலீசில் புகார் அளிக்கலாம் என முடிவு செய்துள்ளனர். எனினும் உண்டியலில் நூதன முறையில் பணத்தை திருடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருவது குறித்து அப்பகுதி மக்கள் பரபரப்பாக பேசி வருகின்றனர்.
Related Tags :
Next Story