காய்கறி கடையில் பணம் திருட்டு


காய்கறி கடையில் பணம் திருட்டு
x

காய்கறி கடையில் பணம் திருட்டு பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி அண்ணாகாய்கறி மார்க்கெட்டில் கடை நடத்தி வருபவர் ரவி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வசூல் தொகை ரூ.45 ஆயிரத்து 900-த்தை கடையில் உள்ள பீரோவில் வைத்து பூட்டிவிட்டு சாவியை கடையில் வைத்துவிட்டு சென்றாராம். அடுத்தநாள் வந்து பார்த்தபோது பீரோ சாவி மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரவி வேறு ஒரு சாவியை போட்டு பீரோவை திறந்து பார்த்த போது அதில் வைத்திருந்த ரூ.45 ஆயிரத்து 900-த்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ரவி கடையில் பொருத்தப்பட் டிருந்த கண்காணிப்பு கேமராவை சரி பார்த்தபோது அதில் இருந்த பதிவுகளும் காணவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ரவி இந்த திருட்டு சம்பவம் குறித்து சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்பேரில் டவுன் குற்றப்பிரிவு போலீசார் காய்கறி மார்க்கெட்டில் வேறு ஒரு கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். அப் போது பணம் திருடுபோன கடையில் கடந்த சில மாதங் களுக்குமுன் வேலை செய்த வாலிபர் ஒருவர் கடைக்கு வந்து சென்றது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் அந்த நபரை தேடி வருகிறார்கள்.


Next Story