ரூ.50 ஆயிரம் திருட்டு


ரூ.50 ஆயிரம் திருட்டு
x

ரூ.50 ஆயிரம் திருட்டு பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம்

பரமக்குடி,

பரமக்குடி சேதுபதி நகர் பகுதியை சேர்ந்தவர் கருப்புச்சாமி (48). இவர் விவசாய தேவைக்காக அவரது மனைவி வேம்பு செல்வி என்பவரது பெயரில் இருந்த பணத்தை எடுக்க பரமக்குடியில் உள்ள வங்கிக்கு வந்துள்ளார். அந்த வங்கியில் ரூ.70 ஆயிரம் பணத்தை எடுத்துவிட்டு அவரது மோட்டார் சைக்கிள் சீட்டுக்கு அடியில் வைத்துள்ளார். பின்பு பாரதி நகர் பகுதியில் வாகனத்தை நிறுத்திவிட்டு சில நேரம் கழித்து வந்து பார்த்தபோது வண்டியில் இருந்த ரூ.50 ஆயிரம் மட்டும் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கருப்புச்சாமி பரமக்குடி நகர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story