சேத்தியாத்தோப்பில் ஓட்டலில் பணம் திருட்டு போலீஸ் விசாரணை


சேத்தியாத்தோப்பில்  ஓட்டலில் பணம் திருட்டு  போலீஸ் விசாரணை
x

சேத்தியாத்தோப்பில் ஓட்டலில் பணம் திருட்டு போனது குறித்து போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடலூர்


சேத்தியாத்தோப்பு,

சேத்தியாத்தோப்பு கடை வீதியில் ஓட்டல் ஒன்று இயங்கி வருகிறது. சம்பவத்தன்று இரவு அதன் உரிமையாளர் ஓட்டலை மூடிவிட்டு சென்றார். மறுநாள் காலையில் வந்து பார்த்த போது, கடையில் இருந்த கல்லா பெட்டி திறந்த நிலையில் அதில் இருந்த ரூ. 62 ஆயிரம் திருடு போயிருந்தது.

உடன் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை அவர் பார்த்தார். அதில் 12 வயது சிறுவன், கடையின் பின்பக்க கதவை திறந்து உள்ளே நுழைந்து பணத்தை திருடி சென்று இருப்பது பதிவாகி இருந்தது.

சிறுவன் பற்றிய அடையாளம் தெரிந்து, அவரது வீட்டுக்கு ஓட்டல் ஊழியர்கள் பிரகாஷ், செல்வம், ராஜீவ்காந்தி, முருகன் ஆகியோர் சென்று கேட்டனர். அப்போது அங்கிருந்த சிறுவனின் சித்தியை அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுவனின் குடும்பத்தினர் தரப்பில் அளித்த புகாரின் பேரில் ஓட்டல் ஊழியர்கள் 4 பேர் மீது சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அதேபோல், திருட்டு சம்பவம் தொடர்பாக ஓட்டல் நிர்வாகம் தரப்பில் அளித்த புகாரின் பேரில் சிறுவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story