உண்டியலை உடைத்து திருட்டு


உண்டியலை உடைத்து திருட்டு
x

உண்டியலை உடைத்து திருட்டு பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை

காளையார்கோவில்,

மதுரை - தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் காளையார்கோவில் அருகே ஆண்டிச்சியூரணி விலக்கு பகுதியில் புனித ஆரோக்கிய அன்னை கெபி அமைந்துள்ளது. இதன் முகப்பு பகுதியில் உள்ள உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்றுள்ளனர். மேலும் சி.சி.டி.வி. கேமராக்களை சேதப்படுத்திவிட்டு கெபியின் பின்பக்கம் உள்ள கதவை உடைத்து சி.சி.டி.வி.யின் பதிவுகள் அடங்கிய ஹார்ட் டிஸ்கையும் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து காளையார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

1 More update

Next Story