பக்தரிடம் 18 பவுன் நகை திருட்டு
பக்தரிடம் 18 பவுன் நகை திருட்டு பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
காஞ்சீபுரம் மாவட்டம் விஜயநகரில் வசித்து வருபவர் நடராஜ் பிரபு. இவரது மனைவி சரண்யா. இவர் அவரது குடும்பத்துடன் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தார். இந்த நிலையில் கோவில் வாசல் முன்பு உள்ள கோவில் நிர்வாகத்திற்கு உட்பட்ட பொருட்கள் பாதுகாப்பு அறையில் சரண்யா தனது பையில் 18 பவுன் நகையை வைத்துவிட்டு கோவிலுக்குள் சென்றுசாமி கும்பிட்டார். பிறகு பாதுகாப்பு அறையில் கொடுத்த பையை வாங்கிக்கொண்டு ஊருக்கு சென்றார். இந்த நிலையில் சரண்யா அவரது பையை திறந்துபார்த்தபோது 18 பவுன் நகையை காணவில்லை. அதனால் அதிர்ச்சி அடைந்தார்.இது தொடர்பாக திருப்பரங்குன்றம் போலீஸ் நிலையத்திற்கு தபால் மூலமாக சரண்யா புகார் கொடுத்துள்ளார்.அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story