2 அம்மன் கோவில்களில் திருட்டு


2 அம்மன் கோவில்களில் திருட்டு
x

ஏரியூர் அருகே 2 அம்மன் கோவில்களில் மணி உள்ளிட்டவற்றை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தர்மபுரி

ஏரியூர்:

ஏரியூர் அருகே 2 அம்மன் கோவில்களில் மணி உள்ளிட்டவற்றை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அம்மன்கோவில்களில் திருட்டு

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே ராமகொண்டஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட மலையனூரில் பெரிய மாரியம்மன், பத்ரகாளியம்மன் கோவில்கள் உள்ளன. இந்த 2 கோவில்களும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ளன. நேற்று காலை பொதுமக்கள் பெரிய மாரியம்மன் கோவிலுக்கு வந்தனர். அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு முன்புறத்தில் இருந்த 25 கிலோ எடை கோவில் மணி, பூஜை சாமான்கள் திருட்டு போனது.

அதேபோல அருகில் இருந்த பத்ரகாளியம்மன் கோவிலில் இருந்த 4 மணிகளையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிந்தது. இதுகுறித்து பொதுமக்கள் ஏரியூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ஏரியூர் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 2 கோவில்களில் மர்ம நபர்கள் பூட்டுகளை உடைத்து பணம், நகை திருடி சென்றனர். இதில் தொடர்புடைய நபர்கள் நேற்று முன்தினம் 2 அம்மன் கோவில்களிலும் திருட்டில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.ஏரியூர் பகுதியில் தொடர்ந்து கோவில்களில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டி வரும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story