வீடுபுகுந்து 4 பவுன் நகை திருட்டு
வீடுபுகுந்து 4 பவுன் நகை திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்
திருப்புல்லாணி அருகே உள்ள புதுக்கோவில் ஊருணிக்காரன்வலசை பகுதியை சேர்ந்த கருப்பையா மனைவி நாகவள்ளி (வயது70). இவர் தனது கணவருடன் ஊருணிக்காரன் வலசை பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் தங்கி பராமரிப்பு வேலை செய்து வந்துள்ளார். இந்தநிலையில் கருப்பையா சில மாதங்களுக்கு முன் இறந்துவிட்டதால் நாகவள்ளி மட்டும் தோப்பில் தங்கி தொடர்ந்து வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இவர் தோப்பில் வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தபோது முகத்தை மூடியபடி வந்த மர்ம நபர் வீட்டிற்குள் புகுந்து 4 பவுன் தங்க நகையை திருடிக்கொண்டு சென்றுவிட்டாராம். சத்தம்கேட்டு எழுந்து பார்த்த நாகவள்ளி சங்கிலி திருடுபோயிருப்பதை கண்டு ராமநாதபுரம் கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story