7 வீடுகளில் கொள்ளை முயற்சி


7 வீடுகளில் கொள்ளை முயற்சி
x

7 வீடுகளில் கொள்ளை முயற்சி பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை

திருமங்கலம்,

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே எஸ். கோபாலபுரம் கிராமத்தில் குடியிருப்பவர்கள் வெளியூர்களில் ஓட்டல் தொழில் நடத்தி வருகின்றனர். பெரும்பாலானோர் வீடுகள் பூட்டிய நிலையிலேயே இருக்கும். இநத்நிலையில் நேற்று முன்தினம் இரவு எஸ்.கோபாலபுரம் கிராமத்தில் அடுத் தடுத்து உள்ள பூட்டிய வீடுகளில் மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளனர். பொருட்கள் எதுவும் இல்லாததால் திரும்பிச் சென்று விட்டனர். வெளியூரில் ஓட்டல் வைத்து இருந்தவர்கள் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து எஸ். கோபாலபுரம் முனியாண்டி கோவில் நிர்வாகி சீனிவாச ராகவன் கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் மோப்பநாய் கைரேகை நிபுணர்கள் வரவழைத்து விசாரணை தீவிரப்படுத்தி உள்ளனர். ஒரே கிராமத்தில் ஒரே நாளில் 7 வீடுகளில் கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story