பள்ளிபாளையத்தில் ஜீவ பிருந்தாவன கோவிலில் பணம் திருட்டு


பள்ளிபாளையத்தில்  ஜீவ பிருந்தாவன கோவிலில் பணம் திருட்டு
x

பள்ளிபாளையத்தில் ஜீவ பிருந்தாவன கோவிலில் பணம் திருட்டு

நாமக்கல்

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் வசந்தநகர் பகுதியில் ஸ்ரீ நாக மகர தீர்த்த சாமிகளின் ஜீவ பிருந்தாவன கோவில் உள்ளது. இங்கு தினமும் ஒரு பூசாரி வந்து பூஜைகள் செய்து விட்டு பிருந்தாவன கோவிலை பூட்டி செல்வது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் வழக்கம்போல் பூசாரி வந்து பூஜைகள் செய்து விட்டு பிருந்தாவன கோவிலை பூட்டி சென்றார். இதையடுத்து நேற்று காலை வந்து பார்த்தபோது மர்மநபர்கள் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று பிருந்தாவன கோவிலில் வைத்திருந்த ரூ.2 ஆயிரம் மற்றும் 2 சிறிய குத்துவிளக்குளை திருடி சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் திருட்டு தொடர்பாக பள்ளிபாளையம் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story