வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை திருட்டு
அதியமான்கோட்டையில் வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை திருட்டு போனது.
தர்மபுரி
நல்லம்பள்ளி:
அதியமான்கோட்டை கவுண்டர் தெருவை சேர்ந்த தேவக்குமார் மனைவி மேகலா (வயது23). இவர் கடந்த 7-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு குழந்தையுடன், வெத்தலக்காரன்பள்ளம் கிராமத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றார். மறுநாள் மேகலா வீட்டிற்கு வந்த போது கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 7 பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள், பணம் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story