பெருந்துறை அருகே கிராம நிர்வாக அலுவலகத்தில் மடிக்கணினி திருட்டு


பெருந்துறை அருகே கிராம நிர்வாக அலுவலகத்தில்  மடிக்கணினி திருட்டு
x

பெருந்துறை அருகே கிராம நிர்வாக அலுவலகத்தில் மடிக்கணினி திருட்டு

ஈரோடு

பெருந்துறை

பெருந்துறை அருகே உள்ள சரளையில் கம்புளியம்பட்டி வருவாய் கிராம அலுவலகம் உள்ளது. தனியாருக்கு சொந்தமான சிமெண்ட் கூரை கட்டிடத்தில் இந்த அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் தங்கராஜ்.

இவர் கடந்த 24-ந் தேதி மாலை பணி முடிந்து அலுவலகத்தை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று முன்தினம் அவர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அங்கு மேஜையில் வைக்கப்பட்டிருந்த அவரது மடிக்கணினியையும், ஒரு காபி பிளாஸ்க்கையும் காணவில்லை.

மர்மநபர் ஒருவர் நேற்று முன்தினம் நள்ளிரவில் அலுவலக கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளார். பின்னர் அங்கு மேஜையில் வைக்கப்பட்டிருந்த மடிக்கணினியையும், காபி பிளாஸ்க்கையும் திருடிவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றார் என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் தங்கராஜ் பெருந்துறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story