கோவில் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் கிடந்த நகையை மர்ம ஆசாமிகள் கொள்ளை


கோவில் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் கிடந்த நகையை மர்ம ஆசாமிகள் கொள்ளை
x

காங்கயம் அருகே செல்லாண்டியம்மன் கோவில் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் கிடந்த நகையை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

திருப்பூர்


காங்கயம் அருகே செல்லாண்டியம்மன் கோவில் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் கிடந்த நகையை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

செல்லாண்டியம்மன் கோவில்

ஊதியூர் அருகே உள்ள நத்தக்காட்டுபுதூர் பகுதியில் செல்லாண்டியம்மன் கோவில்உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை கோவிலின் கதவுகள் திறந்து கிடப்பதை பார்த்து அருகில் உள்ளவர்கள் சென்று பார்த்துள்ளனர். அப்போது கோவிலின் முன்புற கதவும் கருவறை கதவின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து ஊதியூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது கோவிலின் முன் கதவு பூட்டும், கருவறை கதவின் பூட்டும் உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அம்மனின்கழுத்தில் இருந்த தங்கத்தில் ஆன மாங்கல்யம் மற்றும் வெள்ளியிலான சங்கிலி ஆகியவை கொள்ளை போனது தெரிய வந்தது.

மேலும் பூஜைக்கு பயன்படுத்தும் சில பொருட்களை கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து ஊதியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அருகில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவை கொண்டும் மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். கொள்ளை போன பொருட்களின் மதிப்பு ரூ.50 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.


Related Tags :
Next Story